திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 27 மே 2022 (10:46 IST)

வீரர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடைபயிற்சி! – ஐஏஎஸ் தம்பதிகள் இடமாற்றம்!

Upset
டெல்லியில் மைதானத்தில் பயிற்சியில் இருந்த விளையாட்டு வீரர்களை வெளியேற்றிவிட்டு நாயுடன் நடைபயிற்சி மேற்கொண்ட ஐஏஎஸ் அதிகாரிகளான தம்பதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி அரசு நிர்வாகத்தில் வருவாய்துறை முதன்மை அதிகாரியாக செயல்பட்டு வருபவர் சஞ்சீவ் கிர்வார். இவரது மனைவு ரிங்கு டுஹாவும் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர்கள் தினம் மாலை 7 மணிக்கு தங்கள் வளர்ப்பு நாயுடன் அருகே உள்ள தியாகராஜா மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளனர். இதற்காக அந்த மைதானத்தில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்பவர்களை தினமும் அவர்கள் கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலான நிலையில் அவர்களை பணியிட மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி சஞ்சீவ் கிர்வார் லடாக்கிற்கும், அவரது மனைவி ரிங்கு அருணாச்சல பிரதேசத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.