1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (15:57 IST)

தேர்தல் சட்ட ஆலோசகராக சீமான் மனைவி கயல்விழி நியமனம்! நாம் தமிழர் கட்சி அறிவிப்பு..!

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சட்ட ஆலோசகராக அககாட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் மனைவி கயல்மொழி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக சட்ட ஆலோசகர்களை நியமனம் செய்யும் அறிவிப்பு ஒன்று நாம் தமிழர் கட்சியை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தென்சென்னை தொகுதி சட்ட ஆலோசகராக சீமானின் மனைவி கயல்விழி காளிமுத்து நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அவர் தென் சென்னையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியினருக்கு சட்ட ஆலோசனை வழங்குவார். சீமானின் நாம் தமிழர் கட்சி வாரிசு அரசியல், குடும்ப அரசியலை கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினரே நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பு ஏற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva