செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 18 மார்ச் 2018 (08:35 IST)

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்

உத்திரபிரதேச நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று பேர் வேலை விஷயமாக உத்திரபிரதேசத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். கார் இன்று காலை உத்திரபிரதேச மதுரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, எதிரே  வந்த வாகனம் நிலை தடுமாறி இவர்களின் காரின் மீது மோதியுள்ளது. 
 
இந்த கோர விபத்தில் 3 மருத்துவர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஷயமறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மூன்று பேரின் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.