செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (14:32 IST)

வடமாநிலத்தில் இளம்பெண்ணை உயிரோடு எரித்த மர்ம நபர்கள்

உத்திர பிரதேசத்தில் இளம்பெண் ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளர்ந்து வரும் கால கட்டத்தில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. குறிப்பாக உத்திரபிரதேசத்தில் பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் குற்றவாளிகள் திருந்திய பாடில்லை.
 
இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் என்ற கிராமத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர், தனது வீட்டிற்கு காய்கறி வாங்குவதற்காக அருகிலிருக்கும் காய்கறி மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். காய்கறி வாங்கிவிட்டு சைக்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த பெண் மீது மர்மநபர்கள் சிலர்  பெட்ரோல் ஊத்தி கொளுத்தியுள்ளனர். அந்த பெண்ணை யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. அனைவரும் சுற்றி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர். வலியால் துடித்த அந்த பெண் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இந்த செயலில் ஈடுபட்ட மனித மிருகங்களை தேடி வருகின்றனர். மர்ம நபர்களை பிடித்து அவர்களையும் தீயிட்டு கொளுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.