திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (14:36 IST)

முதல் பிரச்சாரத்துக்கே லேட்டாக வந்த தீபா: எழுதி வைத்த உரையை 10 நிமிடம் வாசித்தார்!

முதல் பிரச்சாரத்துக்கே லேட்டாக வந்த தீபா: எழுதி வைத்த உரையை 10 நிமிடம் வாசித்தார்!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா படகு சின்னத்தில் களம் இறங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் சின்னம் அறிமுகப்படுத்தி, தேர்தல் அறிக்கை வெளியிடும் முதல் பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டையில் நடைபெற்றது.


 
 
ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது ஆதரவாளர்கள் பலரும் தீபாவின் பக்கம் சாய தொடங்கினர். இதனால் தீபா அரசியலுக்கு வந்தார். ஆனால் ஓபிஎஸ் போர்கொடி தூக்கி சசிகலா தலைமையிலான அதிமுகவில் இருந்து வெளியேறிய பின்னர் தீபாவின் ஆதரவாளர்கள் பலரும் ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தனர்.
 
இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்த வலிமையை இழந்த நிலையில் தனது முதல் தேர்தலை சந்திக்கிறார் தீபா. இதனையடுத்து இந்த தேர்தலில் படகு சின்னத்தில் களம் இறங்கும் தீபா சின்னம் அறிமுகப்படுத்தி, தேர்தல் அறிக்கை வெளியிடும் முதல் பொதுக்கூட்டம் தண்டையார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோவில் தெருவில் நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியை மாலை ஆறு மணிக்கு தொடங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தீபா இரவு 8.45 மணிக்கு தான் மேடைகே வந்தார். இதனையடுத்து இரவு 9.30 மணியளவில் எழுதி வைக்கப்பட்டிருந்த உரையை 10 நிமிடம் வாசித்தார். இதனால் தீபாவின் ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.