திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜனவரி 2019 (19:31 IST)

திருவாரூர் தொகுதியில் தீபா போட்டியா? கணவர் மாதவன் முக்கிய தகவல்

திருவாரூர் தொகுதியில் அதிமுக, அமமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என தற்போது நான்கு முனை போட்டி உறுதியாகியுள்ளது. பாமக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டால் ஆறுமுனை போட்டியாக மாறும் நிலை உள்ளது.

இந்த நிலையில் திருவாரூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போட்டியிட போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தொகுதியில் தீபா போட்டியிடுவது குறித்து, வரும் 6ஆம் தேதி சேலத்தில் தெரிவிக்கப்படும் என அவரது கணவர் மாதவன் சற்றுமுன் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஏற்கனவே ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தீபா போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் என்பதும் ஆனால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.