செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (20:33 IST)

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி தேதி: தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

voter
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய மற்றும் புதிய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்க கடந்த சில நாட்களாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்ய டிசம்பர் 8ஆம் தேதி தான் கடைசி தேதி என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
 கடந்த மாதம் 4 நாட்கள் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த மாதமும் சிறப்பு முகாம்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன 
 
இந்த நிலையில் வரும் 8 ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதல் மற்றும் திருத்தம் செய்ய கடைசி தேதி என்பதால் அதற்குள் திருத்தம் செய்துகொள்ள பொதுமக்களது அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran