1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (18:23 IST)

டெல்லி மாநகராட்சி தேர்தல்: வாக்கு பதிவு வெறும் 45 சதவிகிதம் மட்டுமே!

vote
டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் சற்றுமுன் வாக்குப்பதிவு முடிந்ததும்.
 
இந்த நிலையில் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் 45 சதவிகித வாக்குப்பதிவு மட்டுமே நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இன்று காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று காலை முதலே மந்தமாக இருந்தது 
 
காலை பத்து முப்பது மணி அளவில் 9 சதவீதமும் மதியம் 2 மணிவரை 30 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு நடந்த நிலையில் இன்று ஒட்டு மொத்த வாக்கு பதிவு சதவீதம் 45 என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
டெல்லியில் முழுக்க முழுக்க படித்தவர்கள் மற்றும் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு உள்ளவர்கள் இருக்கும் நிலையில் அங்கேயே வெறும் 45 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது என்று கூறப்படுகிறது
 
Edited by Siva