வாய்க்காலில் செத்து மிதக்கும் மீன்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
வாய்க்காலில் செத்துக்கிடக்கும் லட்சக்கணக்கான மீன்கள் துர்நாற்றம் அடித்தும் மாவட்ட நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், இலாலாபேட்டை பகுதியில் காவிரி ஆற்றின் ஓரத்தில் பாயும் தென்கரை மருதாண்டன் வாய்க்காலில் தண்ணீர் தற்போது அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேங்கிய நீர் இலாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் இருந்து விட்டுக்கட்டி, சிந்தலவாடி வரை தண்ணீர் ஆங்காங்கே ஒரு அடி மற்றும் 1/2 அடி மட்டம் வரை தேங்கிய நிலையில் மீன்கள் லட்சக்கணக்கில் செத்து மிதக்கின்றன. இதனால் இந்த பகுதியில் பயணம் செய்யும் மக்கள் மற்றும் ஊருக்குள் செல்லும் மக்கள் அனைவரும் துர்நாற்றம் காரணமாக மூக்கினை பிடித்து செல்கின்றனர்.
மர்ம நபர்கள் யாரோ வெடி மருந்து வீசியதாகவும் அல்லது மருந்து கலந்திருந்தால் மட்டுமே இந்த மீன்கள் லட்சக்கணக்கில் இறந்ததற்கு காரணம் என்றும், மேலும் இந்த நீர் இலாலாபேட்டை பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள ஷட்டரில் தேங்கப்பட்டுள்ளதால் இதன் பாதிப்பு சுமார் 1 கி மீட்டர் வரை மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.