இந்தியா-பாகிஸ்தான் போட்டி அழிவுப்பூர்வமாக இருக்க கூடாது.. தயாநிதி மாறன் எம்.பி பேச்சு
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும், நடந்த போட்டி ஆக்கப்பூர்வமாக இருந்திருக்க வேண்டுமே தவிர, அழிவுப்பூர்வமாக இருக்க கூடாது என சென்னை, அண்ணாநகரில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தயாநிதி மாறன் எம்.பி பேசியுள்ளார்.
அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கும் போது சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டது குறித்து தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது:
“அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையான போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் களமிறங்கும் போதும், வெளியேறும் போதும் அவர்களை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்என கோஷமிடப்பட்டுள்ளனர்.
ஆனால் ஒரு முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் இந்தியாவை வென்றபோது இங்குள்ள பார்வையாளர்கள் அவர்களை கைத்தட்டி வாழ்த்தினார்கள்; இந்த இரண்டு சம்பவமும் மக்களுக்கிடையே உள்ள வித்தியாசத்தை உணர்த்துகிறது
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும், நடந்த போட்டி ஆக்கப்பூர்வமாக இருந்திருக்க வேண்டுமே தவிர, அழிவுப்பூர்வமாக இருக்க கூடாது என கூறினார்.
Edited by Siva