1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (10:28 IST)

உதயநிதியை எதிர்த்து தயாநிதி அழகிரி போட்டியா?

உதயநிதியை எதிர்த்து தயாநிதி அழகிரி போட்டியா?
தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது அரசியல் வருகையை உறுதி செய்தபின் அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி சுறுசுறுப்புடன் இருந்த நிலையில் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப் பின் அக்கட்சியின் தொண்டர்கள் சோர்ந்து போய் இருப்பதாக கூறப்படுகிறது 
 
மேலும் முக அழகிரி உள்ளிட்ட பெரும்பாலான பிரபலங்கள் ரஜினிக்கு ஆதரவு கொடுத்து உள்ளனர் என்பதும் திமுகவுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து தயாநிதி அழகிரி போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு ரஜினி கட்சி ஆதரவு கொடுக்கும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
ஏற்கனவே முக அழகிரி, ரஜினி கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் அவரது கட்சியின் வேட்பாளராக தயாநிதி அழகிரி நிறுத்தப்படுவார் என்பதையும் அவர் உதயநிதிக்கு எதிராக நேருக்கு நேர் போட்டியிடுவாரா? என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்