1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 15 ஏப்ரல் 2022 (08:24 IST)

கொரோனா உயிரிழப்புக்கு நிவாரணம்: தமிழக அரசு கொண்டுவந்த அதிரடி மாற்றம்!

தமிழக அரசு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நிவாரண மனு அளிக்க கடைசி நாள் என்னெவென அறிவித்துள்ளது. 

 
கடந்த சில ஆண்டுகளில் இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று இந்தியா முழுவதும் பல கோடி மக்களை பாதித்துள்ளது. கொரோனா அலைகளால் பல லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு அறிவித்தது.
 
இந்த இழப்பீட்டை பெற கால அவகாசமும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி மார்ச் 20-க்கு முன்னர் கொரோனாவால் இறந்தவர்களுக்கான இழப்பீட்டை பெற 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு நிவாரண மனு அளிக்க கடைசி நாள் என்னெவென அறிவித்துள்ளது. 
அதன்படி, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் தேதிக்கு முன்னர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிவாரணம் பெற அடுத்த 60 நாட்களுக்குள் மனுக்களை சமர்பிக்க வேண்டும் என்வும்  கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அப்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிவாரணம் கோரி மனுக்களை சமர்ப்பிக்க இயலாதவர்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து தீர்வு காணலாம் எனவும் அறிவித்துள்ளது.