செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கடலூர் , வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (18:20 IST)

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வி.சி.க.தலைவர் தொல் திருமாவளவன், அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் தரிசனம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புகழ்பெற்ற சிவ ஆலயம் சிதம்பரம் நடராஜர் கோவில்  விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தலைவர் தொல் திருமாவளவன், வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் இருவரும் நடராஜர் ஆலயத்தில் நடராஜ பெருமானை தரிசனம் செய்தனர்.
 
சிதம்பர நடராஜர் ஆலய செகரட்டரி தீட்சிதர்  வெங்கடேசன்  மூலம் அமைச்சர் மற்றும் திருமாவளவனுக்கு நடராஜ பெருமான் சன்னதியில் தீபா ஆராதனை காண்பித்து இருவருக்கும்  மரியாதை செலுத்தப்பட்டது.
 
பின்பு கோவிலை சுற்றி பார்த்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் தொல் திருமாவளவன்  தீட்சிதர்களிடம் பானை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்
 
அப்போது கோவிலுக்கு வந்திருந்த  பொதுமக்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக் கொண்டார்கள்.