சமூகநீதி மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது பாஜக: விசிக தலைவர் திருமாவளவன்
சமூகநீதி மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது பாஜக என திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது:
பாஜக நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்ற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பானை சின்னம் கேட்டு ஒன்னறை மாதங்கள் கழித்து தான் சின்னம் வழங்க முடியாது என தெரிவித்தார்கள்
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை. பாஜக மற்றும் சங்பரிவார்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள் என தெரியவில்லை;
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன், சமூகநீதி மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது பாஜக என்று கூறினார்.
Edited by Mahendran