ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 1 ஏப்ரல் 2024 (11:34 IST)

குடியரசுத் தலைவரை நிற்க வைப்பதா? விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம்..!

பாஜகவின் பழம்பெரும் தலைவர் அத்வானிக்கு நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கியபோது பிரதமர் மோடியும் அத்வானியும் உட்கார்ந்து இருக்க ஜனாதிபதி நின்று கொண்டிருக்கும் புகைப்படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பிரதமர், முன்னாள் துணைபிரதமர் ஆகியோருக்கு தேசத்தின் முதல் குடிமகவான குடியரசுத் தலைவரை எங்ஙனம் மதிக்க வேண்டும் என்பது தெரியாதா?  
 
தேசத்தின் தலைமை, குறிப்பாக அரசின் தலைமை, குடியரசுத் தலைவர் தான் என்பதை வரையறுத்துக் கூறும் அரசமைப்புச் சட்டத்தையேனும் மதிக்க வேண்டும் என்பதுகூட தெரியாதா?
 
இந்த அவமதிப்பு- 
இவர் பெண்மணி என்பதாலா? அல்லது 
இவர் பழங்குடி என்பதாலா?
அல்லது 
அரசமைப்புச் சட்டம் ஒரு பொருட்டில்லை என்பதாலா?
 
இப்படியொரு படம் வெளியானது அறியாமல் நிகழ்ந்ததா? திட்டமிட்டே நடந்ததா?
 
குடியரசுத் தலைவரை நிற்கவைத்து படம்பிடித்து வெளியிடுவது என்னவகை பண்பாடு?  
பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
 
Edited by Mahendran