திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (19:56 IST)

ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்கு ஆபத்து – ஹெச்.ராஜா

ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்கு ஆபத்து – ஹெச்.ராஜா
ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்கு ஆபத்து என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மதுரையில் பாஜக பிரமுகர் ஹெச்.ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அடுத்தவருடம் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால்  தமிழகத்தில் திமுக கட்சியின குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்றனர். எனவே திமுகவினர் தவறான பிரச்சாரம் செய்வதை நிறுத்த வேண்டும்...மக்கள் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட தீய சக்திகளை புறக்கணிக்க வேண்டும்… என்று கூறினார்.

மேலும், கடந்த 1996 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று குரல் கொடுத்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது. இப்போது ரஜினி கட்சி தொடங்கினால் அதுதிமுகவுக்கு ஆபத்தாக இருக்கும் என தெரிவித்தார்.
ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்கு ஆபத்து – ஹெச்.ராஜா

இருபது வருடங்களுக்கு மேலாகத் தன் அரசியல் வருகையை சஸ்பென்ஷாக வைத்திருந்த ரஜினிகாந்த், முதன்முதலாக கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ஆன்மீக அரசியலை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் கடந்த வாரம் தான் கட்சி ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்தார். அதன்படி அதற்கான வேலைகளையும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது,. அவரது கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அர்ஜூன் மூர்த்தியும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனும்  நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.