வியாழன், 13 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 13 மார்ச் 2025 (11:11 IST)

இப்ப தும்முனாதான் கரெக்டா இருக்கும்! மொழி பிரச்சினையை வைத்து விளம்பரம் செய்த டைரி மில்க்!

Dairy Milk ad

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு இருந்து வரும் சூழலில் சமீபத்தில் கேட்பரி டைரி மில்க் நிறுவனம் வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.

 

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்று மாநில அரசு உறுதியாக தெரிவித்து வரும் நிலையில், இந்தி திணிப்பிற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இதனால் வடக்கு, தெற்கு என்ற கருத்தியல் மோதல்கள் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் டைரி மில்க் விளம்பரம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் மொட்டை மாடியில் இந்திக்கார பெண்கள் பலர் சேர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அந்த குடியிருப்புக்கு புதிதாக குடிவந்த சென்னைக்கார பெண் அவர்களுடன் அமர்கிறார். அவருக்கு இந்தி புரியவில்லை என்பதால் அந்த பெண்கள் ஆங்கிலத்தில் பேச முயற்சிக்கிறார்கள். பிறகு அவர்கள் சாக்லேட்டை ஷேர் செய்து கொள்கிறார்கள்.

 

இதன்மூலம் அவசியம் ஏற்பட்டால் ஒரு மொழியை பிறர் கற்றுக் கொள்வார்கள் என்றும், திணிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் பொருள் கொள்ளும்படி அந்த விளம்பரம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.
 

 

Edit by Prasanth.K