1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஜூலை 2023 (16:01 IST)

பாமக போராட்டத்தில் வன்முறை: கடலூர்-நெய்வேலி பேருந்துகள் நிறுத்தம்..!

bus
பாமகவினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து நெய்வேலி கடலூர் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
நெய்வேலி என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி இன்று போராட்டத்தை நடத்தினார். இந்த போராட்டத்தில் அன்புமணி கைது செய்யப்பட்டதை அடுத்து பாமகவினர் வன்முறையில் இறங்கினர். 
 
இதனை அடுத்து போலீசார் தடியடி நடத்தி வன்முறையாளர்களை கலைத்தனர். இந்த நிலையில் தமிழக டிஜேபி சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் பாமக போராட்டத்தில் வன்முறை வெடித்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மற்றும் நெய்வேலி மார்க்கத்தில் செல்லும் அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. திருச்சி சேலம் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva