வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (13:02 IST)

கடலூரில் ஆலைகள் செயல்பட தொடங்கின! – அத்தியாவசிய பொருட்களுக்காக ஏற்பாடு!

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை உற்பத்தி செய்வதற்காக கடலூரில் ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள சூழலில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் குறைவாகவே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க கடலூரில் முக்கியமான சில ஆலைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, எண்ணெய் ஆலைகள், அரிசி ஆலைகள், பருப்பு ஆலைகள் மற்றும் பிஸ்கட், பிரெட் தயாரிப்பு ஆலைகள் போன்றவை அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்ய தொடங்கியுள்ளன. ஏப்ரல் 15க்கு பிறகு சர்க்கரை ஆலைகளும் செயல்பட தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.