1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 3 ஜூன் 2022 (17:17 IST)

புற்று நோய் வராமல் தடுக்கும் வெள்ளரிக்காய்!

Cancer
வெள்ளரிக்காயில் விட்டமின் சி, கே, பீட்டா கரோடின் பொட்டாசியம் என மிக முக்கிய சத்துக்கள் உள்ளன. விட்டமின் சி  நிறைந்துள்ள வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகரித்து செல்சிதைவை தடுக்கிறது. புற்று நோய்  வராமல் தடுக்கும்.
 
1. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். சீரகத்தை வறுத்து 2 ஸ்பூன் அளவு பொடித்துக் கொள்ளுங்கள். ஒரு ஜாரில் இந்த கலவைகளை போட்டு இவற்றுடன் இளநீரை ஊற்றுங்கள். ஜாரை அப்படியே அரை  மணி நேரம் வைத்து அதன்பின் பருகவும்.
 
2. வெள்ளரிக்காயில் அதிக அளவில் சிலிகா உல்ளதால், தசை இணைப்புகளை திடமாக்கி மூட்டு ஆரோக்கியத்துக்கு துணையாக  நிற்கும். அதிலும் இதனை கேரட் சாறுடன் சேர்த்து பருகும்போது, உடலில் யூரிக் அமிலத்தின் அளவு குறைவதால் கீல்வாதத்திற்கும் நிவாரணம் கிடைக்கும்.
 
3. வெள்ளரிக்காய், பாதியளவு எலுமிச்சை, புதினா இலை ஒரு கையளவு, உப்பு சிறிதளவு, எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக குலுக்கி ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் கழித்து இந்த நீரை குடிக்கவும்.
 
4. வெள்ளரி, திராட்சை, எலுமிச்சையை பொடியாக நறுக்கி ஜாரில் போடுங்கள். ஜாரின் கழுத்துவரை நீர் நிரப்பி நன்றாக குலுக்கி  ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சில மணி நேரம் அந்த நீரை கழித்து குடிப்பதற்கு முன் மிளகுத் தூளை தூவி பருகுங்கள்.