வியாழன், 9 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (17:14 IST)

கடகம்: பங்குனி மாத ராசி பலன்கள் 2022

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் செவ், சுக், சனி - அஷ்டம ஸ்தானத்தில் குரு, புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் ராஹூ என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்:
இரக்ககுணம் நிறைந்த கடகராசியினரே நீங்கள் இனிமையாக பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து  செய்வது நல்லது.  மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.  அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது.

குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.  

கலைத்துறையினருக்கு பண வரத்து அதிகரிக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வரும். உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும்.

பெண்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.   

மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப் பெண் பெற உதவும்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு  தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.

பூசம்:
இந்த மாதம் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். கவனம் தேவை.

ஆயில்யம்:
இந்த மாதம் நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. அதிக கோபத்தால் வீண்பகை உண்டாகலாம்.  மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: அங்காள பரமேஸ்வரியை வேப்பிலை கொடுத்து வணங்க பிரச்சனைகள் சுமுகமாக முடியும். மனக்குறை நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்
சந்திராஷ்டம தினங்கள்: மார் 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: மார் 21, 22.