1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 9 ஏப்ரல் 2023 (10:45 IST)

சிஎஸ்கே – ராஜஸ்தான் மோதல்! டிக்கெட்டுக்காக குவிந்த ரசிகர்கள்!

IPL
ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள சென்னை – ராஜஸ்தான் போட்டிகளுக்கு டிக்கெட் வாங்க ரசிகர்கள் பலர் குவிந்துள்ளனர்.

ஐபிஎல் 2023 லீக் போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முழுக்க இந்தியாவில் பார்வையாளர்களுடன் நடைபெறும் போட்டி என்பதால் ஏராளமானோர் ஐபிஎல் போட்டிகளை மைதானத்தில் சென்று பார்க்க ஆவலாக உள்ளனர். கடந்த சிஎஸ்கே – லக்னோ அணி போட்டி சேப்பாக்கத்தில் நடந்த நிலையில் மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிறைந்தது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டி, நேற்று நடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டி இரண்டிலும் சிஎஸ்கே அதிரடி வெற்றி பெற்ற நிலையில் ஏப்ரல் 12ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

சென்னை அணியின் போட்டியை நேரில் காண இன்று முதல் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. இந்நிலையில் காலை முதலே பெரும் க்யூவில் ரசிகர்கள் டிக்கெட்டுகள் வாங்க காத்துக் கிடக்கின்றனர்.

Edit by Prasanth.K