வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 23 மார்ச் 2024 (13:12 IST)

விஜயபாஸ்கருக்கு நெருக்கடி..!சொத்து விவரங்களை கேட்டு நீதிமன்றத்தில் ED மனு..!

vijayabaskar
அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சொத்து விவரங்களை தரக்கோரி  புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
 
விராலிமலை எம்.எல்.ஏ ஆவாக இருக்கும் சி விஜயபாஸ்கர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர் கே நகர் தேர்தல் பண பட்டுவாடா புகார் தொடர்பாகவும், குட்கா முறைகேடு உள்ளிட்ட காரணங்களால் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டனர்.
 
வருமானவரித்துறை சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விஜயபாஸ்கர் வீட்டில் வியாழக்கிழமை அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
 
மதுரை மற்றும் சென்னையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 8க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.  இதில் பல முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே அமலாக்கத்துறை சோதனைக்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் வருமானத்திற்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் அளவுக்கு சி.விஜயபாஸ்கர் சொத்து சேர்த்ததாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இது தொடர்பான விவரங்களை கேட்டு புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.

அமலாக்கத்துறை மனுவை பரிசீலனை செய்த புதுக்கோட்டை மாவட்ட அமர்வு நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.