1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 10 செப்டம்பர் 2023 (12:29 IST)

அண்ணா வழியை பின்பற்றுகிறார் மோடி.. ஜார்கண்ட் ஆளுனர் சிபி ராதாகிருஷ்ணன்..!

Radhakrishnan
முன்னாள் தமிழக முதலமைச்சர் அண்ணாவின் வழியை பிரதமர் மோடி பின்பற்றுகிறார் என ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்  
 
சிபி ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது முன்னாள் முதல்வர் அண்ணாவை மோடி பின்பற்றுகிறார் என்று நினைக்கிறேன். சென்னை மாநிலம் என்று இருந்ததை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியது சரியா தவறா. 
 
தமிழ்நாடு என பெயர் மாற்றது சரி என்றால் இந்தியாவை பாரத் என்று மாற்றுவதும் சரிதான் என்று அவர் கூறினார்  தமிழ்நாடு என்று மாற்றப்பட்டது போல் தான்  இந்தியா என்று இருப்பது தற்போது பாரத் என்று மாற்றப்பட உள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்தார்
 
Edited by Siva