அரசு ஆசிரியர்கள் டியுஷன் எடுக்க தடை – நீதிமன்றம் உத்தரவு !
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் லாப நோக்கில் டியுஷன் எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை அரசுப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் தொடர்பாக தொடுத்த வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றம் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தனியாக லாப நோக்குடன் டியுஷன் எடுப்பதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளன.
விதிகளை மீறி தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களைக் கண்காணித்து, கடும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார். இது போல டியுஷன் எடுக்கும் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளில் நடக்கும் பாலியல் தொல்லைகள் பற்றி மாணவ மாணவிகள் புகார் அளிக்கவும் கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களை எட்டு வாரங்களுக்குள் அரசு அறிவிக்க வேண்டும் என்றும் அதைப் பள்ளிக் கல்லூரி சுவர்களில் ஒட்டவேண்டும். மேலும் அளிக்கப்படும் புகார்கள் 24 மணிநேரத்தில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளனர்