8 வழி சாலை திட்டம்: அதிரடி தீர்ப்பளித்த நீதிமன்றம்!!!

Last Modified திங்கள், 8 ஏப்ரல் 2019 (10:52 IST)
8 வழி சாலை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நிலம் கையகப்படுத்தப்பட்டது செல்லாது என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வந்தது. இதனை எதிர்த்து விவசாயிகளும், மக்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும் நீதிமன்றங்களை நாடினர்.  சிலர் மனவேதனையில் தற்கொலையும் செய்துகொண்டனர். 
Salem
இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 8ந் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது.
 
அதன்படி 8ந் தேதியான இன்று இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 8 வழி சாலைக்கு விவசாயிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலம் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்றும் அரசின் இந்த கையகப்படுத்தப்பட்ட நடவடிக்கை செல்லாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
 
சுற்றுச்சூழல் துறையின் முறையான அனுமதி பெற்ற பின்னரே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :