1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2019 (18:42 IST)

கோடநாடு விவகாரம் : முதல்வர் எடப்பாடியார் - ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அறிவுரை

கோடநாடு விவகாரம் தனிநபர் தாக்குதல் வேண்டாம் என்று உயர் நீதிமன்றம்  திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடியாருக்கும் அறிவுறுத்தியுள்ளது.
ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணை தடைக்கு எதிராக அரசு தொடர்ந்த வழக்கில் ஆணை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் ஆணை பிறப்பித்துள்ளார்.
 
இதில் அவர் கூறியுள்ளதாவது :
கோடநாடு கொலை, கொள்ளை  விவகாரம் தொடர்பாக தனிநபர் தாக்குதல் வேண்டாம் என முதல்வர் எடப்பாடியாருக்கும், ஸ்டலினுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஸ்டாலின் மீதான அவதூறு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரும் மனு மீது நீதிபதி இளந்திரையன் கருத்து தெரிவித்தார்.
 
பின்னர் இருதரப்பின் இறுதி வாதங்களுக்காக வழக்கை ஏப்ரல் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி இளந்திரையன்.