1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Court talked about high toll fare

சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சுங்கக்கட்டணம்
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் நியாயமானதாக இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2019-ஆம் ஆண்டே முடிந்துவிட்ட சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளின் ஒப்பந்தகாலம் முடிந்துவிட்டது. ஆனால் இன்னமும் அந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து வழக்கறிஞர் ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிமன்றம், ’சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் தொகை நியாயமானதாக இருப்பதாக தெரியவில்லை’ என்று கூறியுள்ளார். இந்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்த நீதிமன்றம் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
என்னடா ஒன்னுமே இல்ல.. திருட பொருள் கிடைக்காததால் திருடர்கள் செய்த காரியம்!