சரும பிரச்சனைகளுக்கு இளநீர் தீர்வு !!

Tender Coconut
Sinoj| Last Modified புதன், 7 ஏப்ரல் 2021 (23:34 IST)

வயிற்றுக்போக்கு பிரச்சனை இருக்கும்போது உடலில் நீர்ச்சத்து அதிக அளவில் குறைவதால் இழந்த நீர்சத்தை திரும்ப பெற இளநீர் அருந்துவது மிகவும் நல்லது.


இளநீரில் குறைந்த அளவே கொழுப்பு இருப்பதால் மற்றும் இளநீரை பருகும்போது வயிறும் நிறைந்து போவதால், தேவையற்ற உணவுகளை சாப்பிட முடியாமல்
உடல் எடை குறைய உதவுகிறது.

இளநீரில் சர்க்கரை நோயாளிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாலும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுவதாலும், நீரிழவு நோய் உள்ளவர்கள் இளநீர் பருகுவது மிகவும் நல்லது.

இளநீர் தோல் சம்பந்தமான வியாதிகள் அனைத்தையும் குறிப்பாக சோரியாசிஸ் வியாதி ஏற்படாமல் தடுப்பதில் சிறப்பாக செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது.

பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும்.

தினமும் இளநீர் குடிப்பவர்களுக்கு உடலில் இந்த எலக்ட்ரோலைட் உப்புச்சத்துக்கள் கிடைக்கப் பெற்று, உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தந்து சிறப்பான உடல் இயக்கத்திற்கு வழிவகை செய்கிறது.
முகத்தில் ஏற்படும் பருக்கள்,
புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை போன்ற இடங்களில் இளநீரை இரவில் படுக்கும்போது தடவிவிட்டு காலையில் கழுவவேண்டும். இதனை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.இதில் மேலும் படிக்கவும் :