ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 நவம்பர் 2022 (19:08 IST)

அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி

Court
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை முகாந்திரம் இல்லை என்ற காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 
 
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடரப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் உடனே தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran