செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 13 ஜனவரி 2024 (13:17 IST)

சமத்துவ பொங்கல் விழா..! குத்தாட்டம் போட்ட மாவட்ட ஆட்சியர்..!!

collector dance
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில்  அலுவலக பெண் ஊழியர்கள் மத்தியில்  மாவட்ட ஆட்சியர் குத்தாட்டம் போட்டு பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார் .
 
தமிழர் திருநாளான  பொங்கல்  விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஒவ்வொரு துறையை சேர்ந்த அலுவலக பெண் ஊழியர்கள் புத்தாடை அணிந்து பொங்கல் வைத்தும் விதவிதமான வண்ண கோலமிட்டு அசத்தினார்கள்.
 
இந்நிகழ்ச்சியில்  தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கரகாட்டம் , தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள்  மேளதாளங்களுடன் நடைபெற்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் விழாக்கோலமாக மாறியது. மேளத்தால இசைகளுக்கு இணங்க மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்  பெண் அலுவலர்களுடன் இணைந்து குத்தாட்டம் போட்டு  பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினார்.
 
பின்னர் அலுவலக ஊழியர்களுடன் இணைந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்று உறியடித்து கலக்கினார். அதைத்தொடர்ந்து  பெண் அலுவலர்கள் போடப்பட்ட வண்ணக் கோலங்களை  மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, சிறந்த கோலங்களுக்கு பரிசுகளை வழங்கினார்.