உயரதிகாரிகள் வீட்டில் பணிபுரியும் காவலர்கள்: காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
காவல்துறையில் உயர் அதிகாரிகளாக பணிபுரிபவர்கள் காவல் துறையில் பணிபுரிந்து விட்டு ஓய்வு பெற்றவர்களின் வீடுகளில் காவலர்கள் பணிபுரிந்து வருவது குறித்த சர்ச்சை கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது
இந்த நிலையில் இதுகுறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் வீடுகளில் காவலர்கள் தனிப்பட்ட முறையில் பணி புரிந்தால் அவர்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
ஓராண்டு பயிற்சி முடித்த காவலர்களை உயரதிகாரிகள் தனிப்பட்ட பணிகளுக்காக பயன்படுத்துவது குற்றம்
அதேபோல் அரசியல்வாதிகளும் காவல்துறையும் கூட்டு சேர்ந்து செயல்பட கூடாது. அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும் பரிசும் கொடுப்பது தவறு தான். இவை தவறுகள் அதிகரிக்க வழிவகுக்கும் என ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது