1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 ஜூன் 2022 (18:30 IST)

2 நாட்களில் 2 லாக்கப் மரணங்கள், என்ன செய்கிறது முதல்வரின் காவல்துறை: அண்ணாமலை

annamalai
2 நாட்களில் 2 லாக்கப் மரணங்கள், என்ன செய்கிறது முதல்வரின் காவல்துறை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: 
 
இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
 
மேலும் கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா??? என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.