மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளின்றி கட்டடம் கட்ட கூடாது: நீதிமன்றம் உத்தரவு

court
மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளின்றி கட்டடம் கட்ட கூடாது: நீதிமன்றம் உத்தரவு
siva| Last Updated: திங்கள், 5 ஜூலை 2021 (15:27 IST)
தமிழகத்தில் உள்ள பல அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான வசதிகள் எதுவும் இல்லை என்றும் மாற்றுத்திறனாளிகளின் மூன்று சக்கர சைக்கிளில் செல்வதற்கான பாதை வசதிகள் இல்லை என்றும் அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் என்றும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது

இதுகுறித்து பொது நல வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளின்றி இனி அரசு கட்டடம் கட்ட கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இல்லாமல் இனிமேல் அரசு கட்டிடங்கள் கட்டக்கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்த நிலையில் 32 மாவட்ட அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி அமைக்கப்பட்டு உள்ளன என்றும் அரசு தரப்பு கூறியுள்ளது
மாநிலம் முழுவதும் உள்ள அரசு கட்டிடங்களில் மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் உள்ளதா என நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த பதிலை தமிழக அரசு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இரண்டு மாதங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் இந்த வழக்கை ஒத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :