புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 8 செப்டம்பர் 2021 (12:05 IST)

தடை விதிச்சா விதிச்சதுதான்; நாங்க தலையிட மாட்டோம்! – விநாயகர் சதுர்த்தி வழக்கில் நீதிமன்றம் பதில்!

தமிழக அரசு விநாயகர் சதுர்த்திக்கு விதித்த தடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்யவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கின் மீதான விசாரணையில் “தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கவே பொது வெளியில் சிலை வைத்து வழிபட அரசு தடை விதித்துள்ளது. அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை” என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.