சென்னையில் உள்ள 10 சுரங்கப்பாதைகளில் மழைநீர்: அமைச்சர் தகவல்!
சென்னையில் உள்ள 10 சுரங்க பாதைகளில் வெள்ளநீர் சூழ்ந்து உள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
சென்னையில் உள்ள 10 சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்கி இருப்பதாகவும் கடந்த 24 மணி நேரத்தில் வெள்ள பாதிப்பு காரணமாக 4 பேர் உயிரிழப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்
மேலும் வரும் 9ஆம் தேதிக்கு மேல் காற்றழுத்த தாழ்வு வலுப் பெற வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து என்டிஆர்எப், எஸ்டிஆர்எப் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து நிலையிலும் தயாராக தமிழக அரசு இருப்பதாகவும் மரம் அறுக்கும் எந்திரங்கள் ஜேசிபி உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து வரும் 11ஆம் தேதி தமிழகம் வருகை தரும் என்றும் அதனால் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்