வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2020 (15:10 IST)

பெற்றோருக்கு பயந்து போலீஸ் ஸ்டேசனில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடி !

திருப்பத்தூர் மாவட்டம் பென்னேரி பகுதியில் வசிப்பவர் கருணாகரன்.இவரது மகன் ஹரிகுமார். இவர் அங்குள்ள ஒர்ஷாப்பில் மெக்கானிக்காக வேலை பார்ட்து வந்துள்ளார். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த நீலாவதி என்ற கல்லூரி மாணவியும் கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், கல்லூரியில் படிக்கும் மாணவி  மெக்கானிக்கை எப்படி காதலிக்கலாம் என நீலாவதியின்  தந்தை அவரை கண்டித்ததுடன் அவருக்கு திருமண செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.

இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த நீலாவதியின் தந்தை  ஹரிகுமாரின் வீட்டிற்குச் சென்று அவர்களின் வீட்டில் உள்ள பொருட்கள சேதம் செய்துள்ளார்.  ஹரிகுமரின் தாயை சரமாரியாக அடித்துள்ளார்.

இதை எப்படியோ அறிந்துகொண்ட ஹரிகுமார் தனக்கு பாதுக்காப்பு வேண்டுமென கேட்டு தன் காதலி நீலாவதியுன் காலல் நிலையத்திற்குச் சென்றுள்ளனர்.

 மேலும் தாங்கள் மூன்று மாதத்திற்கு முன்னர் திருமணம் செய்து கொண்ட திருமண சான்றிதழ்களையும் போலீஸாரிடம் காட்டியுள்ளனர்.  பின்னர் ஹரிகுமாரின் தந்தை காவல்நிலையம் வந்து இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.