1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (14:30 IST)

ஆசைப்பட்ட அண்ணியுடன் கள்ளக்காதல் : அண்ணணை கொன்ற இளைஞர் !

சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் அருகே உள்ள முசுண்டப்பட்டி - துவரங்குறிச்சி சாலையில் ஒரு பாலத்தின் கீழே ஆண் சடலன் ஒன்று இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதனையடுத்து போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சிங்கம்புணரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
 
பின்னர் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, இறந்துகிடந்தவர்  வலசைப்பட்டி  கிராமத்தில் வசித்துவந்த முருகையா (40). அவர் கொத்தனாராக அவர் அங்கு வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.  இதுபற்றி புழுதிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 
 
அதில், முருகையாவின்  மனைவி மேகலைக்கும் (36) முருகையாவின் தம்பி பிச்சமணிக்கும் (34) இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்த விஷயம் முருகையாவுக்குத் தெரியவந்ததும் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே அடிக்கடித் தகராறு எழுந்தது. 
 
இதனையடுத்து முருகையா உயிருடன் இருந்தால் நாம் கள்ளக்காதலை தொடரமுடியாது என்று எண்ணி, மணிமேகலையும், பிச்சமணியும் திட்டம் தீட்டி முருகையாவை பிச்சமணி கழுத்து நெறித்து கொன்றதாகத் தெரிகிறது. பிறகு இருவருமாகச் சேர்ந்து முருகையாவின் உடலை பாலத்தின் அடியில் போட்டுவிட்டுள்ளனர்.
 
இதனை தொடர்ந்து போலீஸார் மணிமேகலை மற்றும் பிச்சமணியை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.