ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 17 ஜூன் 2019 (13:27 IST)

டிரைவரும் மப்பு.. கண்டக்டரும் மப்பு – பயணிகள் உயிரில் அலட்சியம் !

சென்னையில் இருந்த திருச்சிக்கு நேற்று நள்ளிரவு சென்ற அரசுப் பேருந்தை இயக்கிய டிரைவரும் கண்டக்டரும் மது போதையில் இருந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

நேற்று  முன்தினம் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்ற அரசுப் பேருந்தில் 50 க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். பஸ்ஸைப் பேருந்து நிலயத்தில் இருந்தே தாறுமாறாக ஓட்டி வந்துள்ளார் டிரைவர். சிஙகபெருமாள் கோயில் அருகே சென்ற போது அந்த பஸ்ஸுக்கு முன்னர் சென்ற இன்னொரு பேருந்து மீது கிட்டத்தட்ட மோதும் அளவுக்கு பஸ்ஸை இயக்கியுள்ளார் டிரைவர்.

இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் டிரைவரிடமும் கண்டக்டரிடமும் சண்டைக்கு செல்ல இருவரும் முழுமையானப் போதையில் இருந்துள்ளனர். இதனை அடுத்து அவர்களை அடித்து உதைத்த பொதுமக்கள் அவர்களை மறைமலை நகர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பயணிகளுக்கு மாற்று பேருந்தைப் போலிஸார் ஏற்பாடு செய்தனர்.

விசாரணையில் டிரைவரின் பெயர் பிரபாகரன் என்றும் கண்டக்டர் பெயர் துரைராஜ் என்றும் தெரிய வந்துள்ளது. பயணிகளின் உயிர் விஷயத்தில் நடத்துனரும் ஓட்டுனரும் இவ்வளவு அலட்சியமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.