ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (16:59 IST)

கடன் கொடுத்தவரை அரிவால் எடுத்து விரட்டிய கவுன்சிலரின் கணவர்!

arrest
திருச்சியில்  கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரை அரியாள் எடுத்துக் கொண்டு துரத்திய திமுக ஒன்றிய கவுன்சிலர் நித்யாவின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மண்னச்ச நல்லூர் அருகே தளுதாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலராக இருப்பவர் நித்யா. இவாது கணவர் வெற்றிச் செல்வன். இவர் அப்பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாகப்  பெற்றிருந்தார்.

இந்தக் கடனை திருப்புக் கொடும்மாலம் பல ஆண்டுகள் குணசேகரனை அலைக்கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்  நேற்றும் வெற்றிச் செல்வனிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட சென்றுள்ளார் குணசேகரன்.

அப்போது, மதுபோதையில் இருந்த வெற்றிச் செல்வன், குணசேகரனை அரிவாளை எடுத்து வெட்ட முயன்றார். இதைத்தடுக்க முயன்றவர்களையும் அவர் வெட்ட முயன்றார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெற்றிச் செல்வன் கைது செய்த போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.