1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:38 IST)

அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரம் : ஒப்பந்ததாரர் கைது

adipump
அடிபம்புடன் சேர்த்து கழிவு நீர் கால்வாய் அமைத்த விவகாரம் : ஒப்பந்ததாரர் கைது
அடிபம்பு உடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
வேலூரில் குடிநீர் அடிபம்புடன் சேர்த்து கால்வாய் அமைத்து விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கால்வாய் அமைக்கப்பட்ட பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சென்று பார்வையிட்ட நிலையில் அடிபம்பு அகற்றிவிட்டு அந்த இடத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் அடிபம்புடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைத்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதோடு ஒப்பந்ததாரர் சுரேந்தர் பாபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் மீது பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன