புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (19:51 IST)

மே மாதம் இறந்தவருக்கு ஜனவரியில் தடுப்பூசி: குறுஞ்செய்தியால் அதிர்ச்சி அடைந்த குடும்பம்!

மே மாதம் இறந்தவருக்கு ஜனவரியில் தடுப்பூசி: குறுஞ்செய்தியால் அதிர்ச்சி அடைந்த குடும்பம்!
கடந்த ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்த ஒருவருக்கு இந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பு ஊசி போட்டதாக குறுஞ்செய்தி வந்திருப்பது குடும்பத்தினர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கொரோனா வைரசால் கடந்த மே மாதம் உயிரிழந்த 70 வயது நபர் ஒருவருக்கு இந்த மாதம் தடுப்பு ஊசி போட்டதாக குறுஞ்செய்தி வந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இது குறித்து அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தபோது தடுப்பூசி செலுத்தியவர் தவறாக மொபைல் எண்ணை கொடுத்து இருக்கலாம் என்றும் இந்த தவறு சரி செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது