1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 19 ஜனவரி 2022 (19:29 IST)

கர்நாடகாவில் 40,000, பெங்களூரில் மட்டும் 24,000: கோரத்தாண்டவமாடும் கொரோனா

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனாவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் 40,499 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை 41,457 
 
பெங்களூரு நகரில்  மட்டும் இன்று ஒரே நாளில் 24,135 நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு (25,595 நேற்றைய பாதிப்பு எண்ணிக்கை)
 
கர்நாடக மாநில சுகாதாரத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது என்பதும் தமிழகத்தை விட அம்மாநிலத்தில் கொரோனா  பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது