செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (08:51 IST)

சென்னையில் கொரோனா பாதித்த சிறுவன் தப்பியோட்டம்! – தேடுதல் பணியில் போலீஸ்!

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்புகள் 20 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது, இந்நிலையில் சென்னை காசிமேடு சிறுவர் காப்பகத்தில் தங்கியிருந்த 35 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள் தண்டையார்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்நிலையில் அந்த சிறுவர்களின் ஜார்ஜ்கண்டை சேர்ந்த 17 வயது சிறுவன் தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தப்பி சென்ற சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர்.

ஏற்கனவே சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து வெவ்வேறு நாட்களில் 4 பேர் தப்பியோடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.