1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 8 ஜூன் 2021 (16:08 IST)

யானைகளுக்கு கொரொனா ?

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலை தொற்று பரவிவரும் நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரொனா தொற்றுப் பரவல் குறைந்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தற்போது முதுமலை யானைகளுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயரண்யம் என 2 முகாங்களின் உள்ள 28 யானைகளுக்கு கொரொனா பரிசோதனை நடைபெற்றது.

அப்போது, யானையின் தும்பிக்கை, மலம் கழிக்கும் பகுதி ஆகியவற்றில் இருந்து நீர் பரிசோதனைக்கு எடுத்தனர்.  இதை உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அதன்பிறகு தான் சோதனை முடிவில் யானைகளுக்கு கொரொனா உள்ளதா என்பது தெரியவரும் எனக் கூறியுள்ளனர்.