செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (18:52 IST)

மதுரையில் வைரலாகும் கொரோனா வைரஸ் கம்மல்!

மதுரையில் வைரலாகும் கொரோனா வைரஸ் கம்மல்!
மதுரையில் உள்ள நகைக் கடைகள் ஒன்றில் கொரோனா வைரஸ் டிசைனில் கம்மல் ஒன்று விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த கம்மல் வாங்க பலரும் ஆர்வத்துடன் கொண்டு கடைக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக மனித இனமே ஆட்டம் கண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸை தற்போது பிசினஸிலும் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் அந்த வகையில் மதுரையில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கொரோனா வைரஸை டிசைனில் புதிய கம்மல் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
 
இந்த கம்மல் வாங்குவதற்காக அந்த பகுதியில் உள்ள பெண்கள் அலைமோதி வருவதாகவும் இந்த கம்மல் பெரும் வரவேற்பை பொதுமக்கள் இடம் பெற்றிருப்பதாகவும் நகை கடை ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
இந்த கம்மலுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மற்ற கடைக்காரர்களும் கொரோனா வைரஸ் டிசைனில் கமல் செய்து விற்பனை செய்ய தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன