செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (17:29 IST)

தலைநகரம் பார்ட் 2 – வடிவேலு இருக்காரா?

தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தில் வடிவேலு நடிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்த படங்களாக வின்னர், கிரி, தலைநகரம் ஆகிய படங்கள் முக்கியமானவை. அந்த படங்கலில் நடித்த கைப்புள்ள, வீரபாகு மற்றும் நாய் சேகர் ஆகிய கதாபாத்திரங்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை. இந்த படங்களில் எல்லாம் இயக்குனர் சுந்தர் சி க்கு முக்கியமான பங்கு உண்டு. இவர்கள் இருவரின் காம்போவில் கடைசியா வந்த நகரம் படம் வெற்றி பெறாவிட்டாலும், வடிவேலு நகைச்சுவை காட்சிகள் பேசப்பட்டன.

இந்நிலையில் இப்போது இயக்குனர் வி இசட் துரை இயக்கத்தில் சுந்தர் சி நடிப்பில் தலைநகரம் பார்ட்2 படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வடிவேலு நடிப்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.