வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 27 பிப்ரவரி 2017 (16:18 IST)

ஜெயலலிதா, சீனிவாசன் இடையே அப்பல்லோவில் நடந்த உரையாடல்: நீங்க நம்பனும்!

ஜெயலலிதா, சீனிவாசன் இடையே அப்பல்லோவில் நடந்த உரையாடல்: நீங்க நம்பனும்!

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் இருந்த போது புகைப்படமோ, வீடியோவோ வெளியிடாதது அவரது மரணத்தை பலரையும் சந்தேகிக்க வைத்தது.


 
 
இதனையடுத்து அப்பல்லோ நிர்வாகமும், சசிகலா தரப்பும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதனையடுத்து ஜெயலலிதாவின் புகைப்படம் வெளியிடாதது குறித்து, அதற்கான காரணத்தை ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் திண்டுக்கலில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
 
அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவை 5 நாட்களுக்கு ஒருமுறை, 10 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசியதாக கூறினார். ஜெயலலிதாவை போட்டோ எடுத்து வெளியிடலாம், பேப்பர்ல போடலாம்னு அப்பல்லோ மருத்துவமனை சேர்மன் மற்றும் எங்களை போன்றவர்கள் கூறினோம். நீங்க நல்லா இருக்கீங்கன்னு ஒருமுறை போட்டோ போட்டா போதும்னு சொன்னோம்.
 
அப்போ ஜெயலலிதா சொன்னாங்க, சீனிவாசன் திரைப்படங்களிலும் உடல்நலம் குன்றாத நிலையிலும் என்னை எப்படி பார்த்திருப்பீங்க, இப்ப என் நிலைமை என்ன? நானே பார்க்கிறேன் நான் உடல்நிலை தேறி, குளிச்சு மொழுகி எல்லாம் டிரெஸ் பண்ணிட்டு நானே வெளியே வந்து எல்லாத்துக்கும் வாழ்த்து சொல்றேன்.
 
அதுவரைக்கும் பொறுமையாக இருங்க. மக்கள் அம்மா இப்படியாகிட்டாங்களேன்னு நினைப்பாங்க. தேறிவந்ததும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஜெயலலிதா சொன்னதாக அமைச்சர் சீனிவாசன் கூறினார். முன்னதாக தான் கூறுவது உண்மை எனவும் தன் பிள்ளைகள் மீது ஆணை நீங்க நம்பனும் என பேசினார் அமைச்சர்.