இரவு ரோந்து பணியின் போது ‘புஷ்பா 2’ படம் பார்த்த உதவி கமிஷனர்.. மேலதிகாரிக்கு தெரிந்ததால் பரபரப்பு..!
நெல்லையில் ரோந்து பணியின் போது உதவி கமிஷனர் ஒருவர் புஷ்பா 2 படம் பார்த்த தகவல் மேல் அதிகாரிக்கு தெரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாநகரில் அப்போது ரோந்து பணிகள் நடைபெறும் நிலையில் 4 பெண் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு உதவி கமிஷனர் நேற்று ரோந்து பணிகள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இரவு 11:30 மணி அளவில் புஷ்பா 2 படம் பார்க்க உதவி கமிஷனர் சென்று விட்டதாகவும் பெண் இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே ரோந்து பணிகள் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் திடீரென வாக்கி டாக்கில் வந்து உதவி கமிஷனரை கூப்பிட்டார். அவர் பதில் அளிக்காததை அடுத்து அவர் தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை தெரிந்து கொண்டார். உதவி கமிஷனர் லைனுக்கு வந்ததும், அவரை கடுமையாக விமர்சனம் செய்ததாகவும், பெண் இன்ஸ்பெக்டர்கள் ரோந்து பணிகளில் ஈடுபடும் போது நீங்கள் எந்த வித பொறுப்பும் இன்றி படம் பார்ப்பது நியாயமா என்று கூறியதை வாக்கி டாக்கில் இருந்த காவல்துறையினர் அனைவரும் கேட்டது பேசு பொருளாகி விட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் காவல்துறை அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva