புதன், 24 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (13:14 IST)

ராம்குமார் மரணம்; சிபிஐ விசாரணை கேட்டு நாளை ஆர்ப்பாட்டம் : திருநாவுக்கரசு அறிவிப்பு

ராம்குமார் மரணம்; சிபிஐ விசாரணை கேட்டு நாளை ஆர்ப்பாட்டம் : திருநாவுக்கரசு அறிவிப்பு

ராம்குமார் மரணம்; சிபிஐ விசாரணை கேட்டு நாளை ஆர்ப்பாட்டம் : திருநாவுக்கரசு அறிவிப்பு
ராம்குமார் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சி தலைவர் திருநாவுக்கரசு அறிவித்துள்ளார்.


 

 
சுவாதி படுகொலையில், ராம்குமார் என்ற வாலிபரை போலீசாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர், சிறையில் உள்ள மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
 
ஆனால் ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரின் தந்தை, வழக்கறிஞர் ராம்ராஜ், விடுதலை கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
மரணமடைந்த ராம்குமாரின் உடல் தற்போது சென்னை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்னும் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவில்லை.
 
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு “ சுவாதி கொலை முதல் ராம்குமார் மரணம் வரை எல்லாவற்றையும் விசாரித்து உண்மைய வெளியே கொண்டு வர வேண்டும். எனவே ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். 
 
அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதை வலிறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாளை (செப்.24) சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று கூறியுள்ளார்.